Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

இயற்கை தரும் பரிசு-இளநீர்


இனிய பானம் இளநீர்,பிணிகளை நீக்கும் சுவைநீர் இளநீர் இனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும் உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனை ஊக்குவிக்கிறது.

இளநீர், இயற்கை அளித்தஇனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும்.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும்இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.

மூல நோயாளிகள், நாட்பட்டசீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.

நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..

பெண்களின் மாத விலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கும் இளநீரே மருந்து.

உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.

பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

சிறுநீரகக்கல், சதையடைப்பு URINARYINFECTION; போன்ற கோளாறுகள் வந்துவிட்டால்முதல் மருந்தே இளநீர் தான்.

கோடைகாலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடியஇனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண்,ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம்ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தருமஇளநீரை இயற்கைப் பானமாக பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ ஆகாரம் மட்டுமேசாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவைச் சிகிக்சைபபுண் OPERATION SORE சீக்கிரம் ஆறிவிடும்..

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால்ஜீரண உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால் வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும
இளநீர் இயற்கை நமக்குத் தந்துள்ள புத்துணர்ச்சி தரும் இனிய பானம் தென்னை தரும் இளநீர் மிகவும் சுவையானது சத்தானது கோடையின் கொடுமையைத் தணிக்க வெப்ப மண்டல மக்களுக்கு இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம்.
தாகத்தைத் தணிக்கும் பானம் மட்டுமல்ல தாதுபொருட்கள் அடங்கிய பல நோய்களைத் தீர்க்கும் தன்மையும் கொண்டது.
மனித உடலில் அதிக அளவு நீர்ச்சத்து விரயமானால் அவற்றைச் சரி செய்ய எளிதில் குறைந்த செலவில் கிடைப்பது இளநீர் மட்டுமே. இளநீரில் உள்ள புரதச்சத்து பசும்பாலில் உள்ளதைவிட அதிகமாகும்.
இளநீர் தரும் சத்தின் அளவு 17.4 கலோரி ஆகும். ஆகையால் சிறந்த மருத்துவ குணம் கொண்ட இளநீர் மனித உடல்நலத்தைப் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இளநீரில் காணப்படும் முக்கிய சத்து சர்க்கரை சத்தாகும். இளநீரில் 5.5 விழுக்காடு சர்க்கரை சத்து அளவு உள்ளது. மற்றும் தாதுப்பொருட்களான பொட்டாசியம், சோடியம், கால்சியம், இரும்பு, செம்பு, கந்தகம், மெக்னீசீயம் போன்ற தாது உப்புக்கள் அடங்கியுள்ளன. இளநீரில் ஊட்டச்சத்துக்கள் பின்வருமாறு
இளங்காய்களில் நீர்;:
ஈரப்பதம்: 95.01, புரதம்: 0.13, கொழுப்பு: 0.12 மாவுப்பொருள்: 4.11, சாம்பல்: 0.63.
இளநீரின் பயன்கள்.
இளநீர் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.
இளநீர் முதியோர்களுக்கும். நோயாளிக்கும் சிறந்த ஊட்டச் சத்து பானமாகும்.
இளநீர் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை., பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம்.
இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்ற உதவுகிறது.
உடலில் ஏற்படும் நீர் இழப்பை சரி செய்வதற்கு இளநீரை பருகுவது நல்லது.
இளநீரில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழவழப்புத் தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு இளநீர் நல்லதொரு பானமாக விளங்குகிறது.
இளநீர் ஊட்டசத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
புகையிலை மற்றும் மது போன்றவைகளினால் ஏற்படும் தீய விளைவுகளை நீக்கக்கூடிய நச்சு முறிவாக செயல்படுகிறது.
மனித குலத்திற்கு இயற்கை தந்துள்ள சத்தான இன்சுவை பானம் இளநீர் மட்டும்தான். மற்ற பானங்களுடன் ஒப்பிடுகையில் இளநீர் மட்டுமே அதிகமான பயன்களைத் தருகிறது.
இளநீர் மிகக் குறைந்த செலவில் அதிகப் பயன்களைத் தரவல்லது. எனவே தாகத்தைத் தணிக்க உடல்நலம் காக்க தினமும் ஒரு இளநீர் குடிப்போம் என்றும் நலமாய் இருப்போம்.

Followers

Comments Please...