Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

விண்டாஸ் 8-ல் புகைப்பட கடவுச்சொல்

விண்டோஸ் 8 இயங்குதளத்தில் கணினிக்கான கடவுச்சொல்லாக நமக்கு பிடித்தமான புகைப்படங்களை வைக்கும் வசதி உள்ளது. இதை எப்படி செயல்படுத்துவது? என்பது பற்றி பார்ப்போம்.

இந்த வீடியோவை பாருங்கள் (நேரமிருந்தால்):



                    
விண்டோஸ் 8-ல் Picture Password வைக்க:


1. கணினியில் Settings பகுதிக்கு சென்று Change PC settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.


2. அங்கே இடதுபக்கம் Users என்பதை க்ளிக் செய்து, Sign-in Options என்ற இடத்தில் Create a picture password என்பதை க்ளிக் செய்யுங்கள்.


3. அங்கே Choose picture என்பதை க்ளிக் செய்து உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள்.


4. தேர்வு செய்த படத்தை உங்களுக்கு விருப்பமான முறையில் நகர்த்தி Use this picture என்பதை க்ளிக் செய்யுங்கள்.


5. புகைப்படத்தில் வட்டம், கோடு, புள்ளி ஆகிய மூன்று சைகைகள் (Gestures) வரையலாம். மூன்றும் ஒரே சைகையாகவும் இருக்கலாம், வெவ்வேறு சைகைகளாகவும் இருக்கலாம். இதனை இரண்டு முறை செய்ய வேண்டும். இது தான் நீங்கள் கொடுக்கும் கடவுச்சொல்.


6. கடவுச்சொல் உருவாக்கப்பட்ட செய்தி காட்டும். பிறகு Finish என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு நீங்கள் கணினியில் உள்நுழையும் போது படத்தைக் காட்டும். நீங்கள் செய்துள்ள சைகைகளை சரியாக செய்தால் உள்ளே போகலாம். கடவுச்சொல் மறந்துவிட்டால், இடதுபுறம் Switch to Password என்றிருக்கும். அதன் மூலம் உள்ளே போகலாம்.

Google+ Followers

Followers

Comments Please...