Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

வலிப்பு நோய் - காரணங்கள் கேள்வி-பதில்கள்

மூளையில் உள்ள நரம்புசெல்கள் உள்பட நம்உடம்பில் உள்ள அனை த்து செல்களும் மின்னணு சக்தி கொ ண்டவை. சில சமயம் நரம்பு செல்க ள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளியிடும்போது ஏற்படும் விளை வே வலிப்புநோய் ஆகும். இதனை காக்காய், ஜன்னி, பிட்ஸ் (fits) மற்று ம் எபிலெப்ஸி (epilepsy) என்றும் அழைக்கலாம்.

வலிப்பு நோய் யாரை பாதிக்கும்?

யாரை வேண்டுமானாலும் பாதிக்க லாம். மொத்த மக்கள் தொகையில் 100க்கு 3 முதல் 5 பேர் வரை இந் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த நோய் அறிகுறிகள் யாவை?
 • இது ஒவ்வொருவருக்கும் மாறுபடு கிறது.
 • கை, கால் இழுத்தல்
 • வாயில் நுரை தள்ளுதல்
 • சுய நினைவு மாறுதல்
 • உடலில் உள்ள பாகம் துடித்தல் (வெட்டுதல்)
 • கண் மேலே சொருகுதல்
 • சில சமயம் சுய நினைவின்றி சிறுநீர் கழித்தல்
 • திடிரென மயாக்கமடைந்து விழுதல்
 • கண் சிமிட்டல்
 • நினைவின்றி சப்பு கொட்டுத ல் (வாய் அசைத்தல்)
 • மற்றும் சில நிமிடங்கள் தன் சுய நினைவின்றி பேசுதல் போன்றவை வலிப்புநோய்ன் அறிகுறிகள்.
வலிப்பு நோய் எதனால் வருகிறது?
 • மூளையில் பூச்சிக்கட்டி (Neurocysticercosis)
 • மூளையில் காச நோய் (Tuber culoma)
 • தலைக் காயம் (Head Injury)
 • குழந்தைகளுக்கு சுரம் ஏற்படும் போது (Febrile Convulsions)
 • மூளை காய்ச்சல் (Brain Fever)
 • மூளையில் இரத்த ஓட்டம் பாதிக்கும் போது
 • மூளையில் புற்று நோய் (Brain Tumer)
 • உறக்கமின்னை
 • போதைப்பொருள் உபயோகித்தல்
 • மற்றும் சிலருக்கு எக்காரணமும் இன்றி வரலாம்

இது பரம்பரை வியாதியா?

பெரும்பாலும் 100க்கு 90 பேருக்கு இது பரம்பரை வியாதி இல்லை. மிக குறைந்த பேருக்கே இது பரம்பரை யின் பாதிப்பாகும்.

இந்த நோய் எந்த வயதில் வரும்?

இந்நோய்க்கு வயது வரம்புகிடையது. குழந்தை முதல் முதியோர் வரை எந் த வயதில் வேண்டுமானாலும் வரலாம்.

இந்த நோய் உள்ளவர்களுக்கு செய்ய ப்படும் சோதனைகள் யாவை? 

 • முதலில் மருத்துவர் நோய்க்கான அறிகுறிகளை கேட்டறிந்து அதன் பின் வலிப்பு நோயினை வகைப்படுத்துகிறார். பின்னர் வியாதிக்கு ஏற்ப,
 • EEG: மூளையின் மின் அதிர்வைப்வரைபடமாக்குதல்.
 • CT Scan: மூளையின் பாக ங்களை கம்ப்யூட்டர் மூலம் ஸ்கேன் செய்தல்.
 • MRI Scan: தேவைப்படின் காந்த அதிர்வு மூலம் மிகத்துல்லியமாக மூலையி ன் பாகங்களை படம் எடுத்தல் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.
இந்த நோய் உள்ளவர்கள் எனன செய்ய வேண்டும்?

அருகாமையில் உள்ள மூளை நரம்பியல் மருத்துவ நிபுணரை சந்தி த்து நோயின் வகை, நோய்க்கான காரணம் ஆகியவற்றை பரிசோத னைகள் மூலம் அறிந்து மருத்து வரின் அறிவுரைப்படி தொடர்ந்து மருந்து உட்கொள்ள வேண்டும்.

எவ்வளவு காலம் மருந்து உட் கொள்ள வேண்டும்?

இது வியாதியின் வகை மற்றும் காரணத்தை பொருத்து மறுபடு கிறது பெரும்பாலும் 3 முதல் 5 வருடம் வரை உட்கொள்ள வேண்டி இருக்கும். பின்னர் தேவை யான பா¢சோதனைகளுக்கு பிறகு மருந்துகளை மெல்லக் குறை த்து அதன் பின் நிறுத்த வேண்டும்.

இந்த நோய் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

தாராளமாக செய்து கொள்ளலாம். திருமணத்திற்கு முன் உங்கள் மருத்து வரை கலந்து அவா¢ன் அலோசனைப் படி மருத்தினை தொடர்ந்து உட்கொள்ளவும்.

இந்த நோய் உள்ளவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா?

தாராளமாக, வலிப்பு நோய் தாய் மற்றும் சேய் இருவரையும் பாதிக்கும். ஆனால் முறையான வலிப்பு நோய் மாத்திரையும்· போலிக் ஆசி ட் (Folic Acid) என்ற சத்து மாத்திரையும் சாப்பிடும்போது சுகப்பிரசவம் காணலாம். கருத்தாக்கும்முன் உங்கள் மருத்துவரை அவசியம் சந்திக்கவும்.

இந்த நோய் உள்ளவர்கள் வாகனங்களை ஓட்டலாமா?

வலிப்பு இல்லாமல் குறைந் தது 6 மாதங்கள் ஆன பிறகு வாகனங்கள் ஓட்டலாம்.

வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:
 • தவறாமல் மருந்து சாப்பிட்டால் வலிப்பு இல்லாமல் இருக்கலாம்.
 • பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக ங்களுக்கு செல்லலாம்.
 • விளையாடலாம், உடற்பயிற்சி, தியானம் மற்றும் பயணம் செய்யலாம்.
 • திருமணம் செய்து கொள்ளலாம், உடலுறவு கொள்ளலாம், சாதாரண மாக குழந்தைகளைப் பெறலாம்
 • உங்கள் குழந்தைக்கு தாய் பால் கொடுக்கலாம்.
 • நல்ல உணவு, உடற்பயிற்சி, தியானம் மற்றும் சிந்தனை உங்களை நல்வழிப்படுத்தும்.
 • நீங்கள் மற்றவர்களைப் போல் நன்கு வாழலாம்.
வலிப்பு நோய் உள்ளவர்கள் செய்யக் கூடாதவை:
 • உங்கள் மருத்துவரை கலந்து அலோசிக்காமல் மருந்து எடுத்து க் கொள்வதை நிறுத்தவோ அல் லது வேறு மருந்துக்கு மாறவோ கூடாது.
 • நேரத்திற்கு உணவு உட்கொள்ள வேண்டும்.
 • தேவையற்ற மன உளைச்சல் கூடாது.
 • மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் வலி ப்பு வருவதை தூண்டலாம்.
 • நகரும், அசையும் உயிருக்கு ஆபத்தான இயந்திரங்கள் கொண் டு வேலை செய்யக் கூடாது.
 • அதிக நேரம் தொலைக்காட்சி (TV) பார்க்கக் கூடாது.
முறையான சிகிச்சை செய்யவில்லை என்றால் . . .
ஒவ்வொரு முறை வலிப்பு வரும் போதும் மூளையில் உள்ள நரம்பு செல்கள்டைகின்றன. இது நாளடைவில் மூளை வளர்ச்சியை பாதிக் கும், எனவே முறையான மருந்துகள் சாப்பிட்டு வலிப்பு நோயைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

Followers

Comments Please...